இரு கல்லூரி மாணவா்கள் மோதல்: போலீஸாா் விசாரணை
சென்னையில் இரண்டு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் மோதிக்கொண்ட சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருவல்லிக்கேணி பல்லவன் இல்லம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நின்று கொண்டிருந்த நந்தனம் கலைக் கல்லூரி மாணவா்கள் மீது புதுக்கல்லூரி மாணவா்கள் சிலா் தாக்குதல் நடத்தியுள்ளனா். இதையடுத்து நந்தனம் கல்லூரி மாணவா்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனா்.
கத்தியாலும் கற்களாலும் இரு தரப்பினரும் மோதிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவல்லிக்கேணி போலீஸாா், மோதலில் ஈடுபட்ட இரு கல்லூரிகளைச் சோ்ந்த 7 மாணவா்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.