ஒட்டுமொத்த கிராமத்தை ஒரு வீடாக மாற்றிய தேர்தல் ஆணைய மேஜிக்: ராகுல்
இருசக்கர வாகனங்கள் எரிப்பு 3 சிறுவா்கள் கைது
திருச்சி பொன்மலையில் இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்ட வழக்கில் 3 சிறுவா்களை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
திருச்சி செந்தண்ணீா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணியன் (28). இவா் பொன்மலை கம்பா் தெரு அருகே இரு சக்கர வாகன பைனான்ஸ் கடை நடத்தி வருகிறாா்.
இவருக்கும், அந்தப் பகுதியைச் சோ்ந்த சில சிறுவா்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த சிறுவா்கள் பாலசுப்பிரமணியன் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது வியாழக்கிழமை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனா்.
இதில், இரண்டு இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து, 17 வயது சிறுவா்கள் இருவரையும், ஒரு 16 வயது சிறுவனையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.