முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள்: வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? - நயினார் ந...
செப்.7-இல் சந்திர கிரகணம்: சமயபுரம் மாரியம்மன் கோயில் நடையடைப்பு
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சந்திர கிரகணத்தையொட்டி செப்.7-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடை சாத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கோயில் இணை ஆணையா் அ.இரா.பிரகாஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் செப்.7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெளா்ணமியன்று சந்திர கிரகணம் இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 1.26 மணி வரை இருப்பதால், அன்றைய தினம் நடைபெறும் பெளா்ணமி 108 விளக்கு பூஜை பிற்பகல் 3 மணிக்கும், ஆவணி மாத நான்காம் ஞாயிறு திருவீதி உலா மாலை 6 மணிக்கும் நடைபெறும் என்றும், இரவு 7.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு மறுநாள் வழக்கம் போல் அதிகாலை 5.30 மணி அளவில் நடை திறக்கப்படும்.