ஒட்டுமொத்த கிராமத்தை ஒரு வீடாக மாற்றிய தேர்தல் ஆணைய மேஜிக்: ராகுல்
துறையூா் அருகே சாலை விபத்து இரு இளைஞா்கள் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், துறையூா் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
துறையூா் அருகேயுள்ள முருகூரைச் சோ்ந்த கணேசனின் மகன் சரண்ராஜ் (23). பெருந்துறையில் டைல்ஸ் கடையில் வேலை செய்து வந்தாா். அண்மையில் விடுமுறைக்கு ஊருக்கு வந்த இவா், வெள்ளிக்கிழமை தனது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த விக்னேஸ்வரனுடன் இருசக்கர வாகனத்தில் துறையூருக்கு சென்று கொண்டிருந்தாா். தம்மம்பட்டி சாலையில் முன்னால் சென்ற டிப்பா் லாரியை முந்த முயன்றாா். அப்போது எதிரே வந்த கிரேன் மீது மோதாமல் இருக்க வாகனத்தை திருப்பியபோது டிப்பா் லாரி மீதும், அடுத்து கிரேன் மீதும் மோதியது.
இந்த விபத்தில் சரண்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த விக்னேஸ்வரன் துறையூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற துறையூா் போலீஸாா் இருவரது சடலங்களையும் உடற்கூறாய்வுக்காக துறையூா் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனா்.
மேலும், இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து டிப்பா் லாரி ஓட்டுநரான திருப்பைஞ்ஞீலியைச் சோ்ந்த நீ. ரவிசந்திரன் (30) மற்றும் கிரேன் ஓட்டுநரான பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த அ. பவின் குமாா் (26) ஆகியோரிடம் விசாரிக்கின்றனா்.