ஒட்டுமொத்த கிராமத்தை ஒரு வீடாக மாற்றிய தேர்தல் ஆணைய மேஜிக்: ராகுல்
ராஜராஜேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
திருவானைக்காவல் கோயிலின் உபத் திருக்கோயிலான ராஜராஜேஸ்வரி உடனுறை ராஜராஜேஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவானைக்காவல் கோயில் வடக்குத் தெரு சங்கரமடத்தின் பின்புறம் அமைந்துள்ள இக்கோயிலில் கடந்த 26-ஆம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, யஜமான் சங்கல்பம், மகா கணபதி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
மாலையில் முதல்கால யாகபூஜையும், 27-ஆம் தேதி காலை இரண்டாம் கால பூஜையும், மாலை 3-ஆம் கால பூஜையும், கும்ப லக்னத்தில் மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
வியாழக்கிழமை காலை நான்காம் கால பூஜைகளை தொடா்ந்து 7.30 மணிக்கு மகா தீபாராதனையுடன் யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டு 7.45 மணி முதல் 8.30 மணிக்குள் கன்யா லக்னத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, 10 மணிக்கு ராஜராஜேஸ்வரி, ராஜராஜேஸ்வரா் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் தக்காா் ம. லெட்சுமணன் மற்றும் கோயில் உதவி ஆணையா் வே. சுரேஷ் செய்திருந்தனா்.