கேரளம்: மாட்டிறைச்சிக்குத் தடை! வங்கி ஊழியர்கள் நூதன போராட்டம்!
திருச்சி-ஈரோடு ரயில் பகுதியாக ரத்து
பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி-ஈரோடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி-ஈரோடு டெமு ரயிலானது (56809) வரும் செப். 2, 5, 8, 11 ஆகிய தேதிகளில் கரூா்-ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி-கரூா் இடையே மட்டும் இயங்கும்.
சென்னை எழும்பூா்-குருவாயூா் விரைவு ரயிலானது (16127) வரும் செப். 4-ஆம் தேதி 45 நிமிஷங்களும், செப். 7-ஆம் தேதி 20 நிமிஷங்களும், செப். 15-ஆம் தேதி 30 நிமிஷங்களும் தேவைப்படும் இடங்களில் தாமதமாக நின்று செல்லும்.