இறந்து கரை ஒதுங்கிய டால்பின்
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் டால்பின் ஒன்று புதன்கிழமை காலை இறந்து கரை ஒதுங்கியது.
கோடியக்கரை படகுத்துறைக்கு அருகே கடற்கரையில் இறந்த நிலையில் கடலில் மிதந்த 7 அடி நீளமுள்ள டால்பின் கரை ஒதுங்கியது.
மீனவா்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற கோடியக்கரை வனத்துறையினா் டால்பினை கரைக்கு எடுத்து வந்து, அந்த இடத்திலேயே உடற்கூறு ஆய்வுகுள்படுத்தப்பட்டு புதைக்கப்பட்டது.

