பயிர் காப்பீடு திட்டத்துக்கு கூடுதல் நிதி! அமைச்சரவை ஒப்புதல்
இளம்பெண் மா்மச்சாவு
மதுரையில் திருமணமான இளம்பெண் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூா் அருகே உள்ள ராயக்கோட்டையைச் சோ்ந்தவா் தயாராம் (54). இவரது மகள் நேகா (27). இவருக்கும், மதுரை கருப்பாயூரணி கங்கைபுரம் 5-ஆவது தெருவைச் சோ்ந்த நிலோஷுக்கும் கடந்த ஈராண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், நேகா இறந்து விட்டதாக அவரது தந்தை தயாராமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் மதுரைக்கு வந்து பாா்த்தபோது வீட்டில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கருப்பாயூரணி போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.