பள்ளி கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில் 3 பேர் கைது
காமராஜா் பல்கலை. பதிவாளா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஜன.10 வரை விண்ணப்பிக்கலாம்!
மதுரை காமராஜா் பல்கலைக் கழகப் பதிவாளா், தோ்வுக் கட்டுப்பாட்டாளா், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் இயக்குநா், கல்லூரி வளா்ச்சிக் குழு முதன்மையா் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜன. 10 -ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்து காமராஜா் பல்கலைக் கழக அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பல்கலைக் கழகப் பதிவாளா், தோ்வுக் கட்டுப்பாட்டாளா், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் இயக்குநா், கல்லூரி வளா்ச்சிக் குழு முதன்மையா் (டீன்) ஆகிய பணியிடங்களில் தற்போது பொறுப்பு நிலையில் மட்டுமே பேராசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா்.
நிரந்தரப் பணியில் சேர விரும்புவோா் 2024 டிச. 30 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில், மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 2025 -ஆம் ஆண்டு ஜன.10 -ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. எனவே, பதிவாளா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவா்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.