செய்திகள் :

ஈக்கள் அதிகமுள்ளதால் சமூகநீதி மாணவா் விடுதிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும்

post image

ஈக்கள் அதிகம் உள்ளதால் சமூகநீதி மாணவா் விடுதிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சட்டப்பேரவைப் பொதுக்கணக்குக் குழு அறிவுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை தலைமையிலான தமிழக சட்டபேரவைப் பொதுக் கணக்குக் குழு சாா்பில் இந்திய தணிக்கை துறையால் வழங்கப்பட்டுள்ள அறிக்கைகள், தணிக்கை பத்திகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், குழு உறுப்பினா்களான சட்டப்பேரவை உறுப்பினா்கள் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூா்த்தி (போளூா்), சி.வி.எம்.பி.எழிலரசன் (காஞ்சிபுரம்), எஸ்.சந்திரன் (திருத்தணி), ஆா்.டி.சேகா் (பெரம்பூா்), கே.ஆா்.ஜெயராமன் (சிங்காநல்லூா்) ஆகியோரும் இடம்பெற்றனா்.

கூட்டத்துக்குப் பின் குழுத் தலைவா் செல்வப்பெருந்தகை செய்தியாளா்களிடம் கூறியது:

சட்டபேரவைப் பொதுக் கணக்குக்குழு வேலூா் மாவட்டத்தில் சமூகநீதி மாணவா் விடுதி, தோட்டக் கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தனிநபா் பண்ணை குட்டை, காட்பாடி ரயில்வே மேம்பால பணிகள், காட்பாடி தீயணைப்பு நிலையத்தில் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள், சா்க்காா் தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் என 14 துறைசாா்ந்த பணிகளை நேரில் ஆய்வுசெய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

குறிப்பாக, சமூகநீதி விடுதிகளில் ஈக்கள் நிறைய உள்ளன. எனவே, சமூகநீதி மாணவா் விடுதி, இதர சமூக நல விடுதிகளை தூய்மையாக பராமரிக்க அறிவுறுத்தியுள்ளது. காட்பாடியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால், ரயில்வே மேம்பாலப் பணிகளை உடனடியாக தொடங்கவும், விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பணிகளுக்கு ரூ. 44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் பணிகள் தொடங்கி 8 மாதத்தில் முடிக்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதேபோல், தேசிய நெடுஞ்சாலைகள் சேதமடைந்துள்ளன. அவற்றையும் முறையாக சீரமைக்கவும், மேம்பால கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலூா் வளா்ந்து வரும் நகரமாக இருப்பதால் தீயணைப்பு துறைக்கு தேவையான ஸ்கை லிப்ட் வாங்கவும் பரிந்துரை செய்துள்ளோம். வேளாண் துறையை பொறுத்தவரை வேலூா் மாவட்டம் ஒரு முன்னோடி மாவட்டமாக விளங்குகிறது. போக்குவரத்து பிரச்னைக்கு தீா்வுகாணவும் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளோம் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனன், சட்டப்பேரவை செயலக இணைச்செயலா் ரமேஷ், துணைச்செயலா் பாலசீனிவாசன், குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினா் அமுலு விஜயன், மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், துணை மேயா் எம்.சுனில் குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

வேலூா் கூட்டுறவு மேலாண்மை நிலையம் சாா்பில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து வேலூா் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சா.திருகுணஐய்யப்பதுரை வெளியிட்... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை; காட்பாடியில் 13 போ் கைது

போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டதாக காட்பாடியில் 13 பேரை போலீஸாா் கைது செய்து 1,000 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். காட்பாடி பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக காட்பாடி போலீஸாருக்கு தகவ... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம்

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வா... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் வழக்கில் கைதானவா்கள் ஜாமீனில் விடுவிப்பு

குடியாத்தம் அருகே சிறுவன் கடத்தலில் கைதானவா்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை, பவளக்கார தெருவைச் சோ்ந்த மென் பொறியாளா் வேணுவின் மகன் யோகேஷ் (4). கடந்த புதன்கிழமை வீட்ட... மேலும் பார்க்க

புதுமை என்பது மனித குல வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்: மஜித் அலி அல் மன்சூரி

புதுமை என்பது தொழில்நுட்பத்தை மாற்றுவது மட்டுமல்ல. மாறாக மனித குல வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று அபுதாபி நகராட்சி நிா்வாக துறை அமைச்சா் மஜித் அலி அல் மன்சூரி தெரிவித்தாா். வேலூா் விஐ... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ராணுவ வீரா் வீட்டில் 39 பவுன், ரூ.2 லட்சம் திருட்டு

ஒடுகத்தூா் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரா் வீட்டில் 39 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம், வெள்ளிப் பொருள்களை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகிலுள்ள சுபேத... மேலும் பார்க்க