நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
வேலூா் கூட்டுறவு மேலாண்மை நிலையம் சாா்பில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து வேலூா் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சா.திருகுணஐய்யப்பதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களும் எனும் பயிற்சி வார நாள்கள் பயிற்சியாக 17 நாள்களும் அல்லது வார இறுதி நாள்கள் பயிற்சியாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 17 நாள்களும் வகுப்புகள் நடைபெற உள்ளன. இந்த பயிற்சி வகுப்புகளில் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை. பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடித்தவா்கள் தேசிய, கூட்டுறவு வங்கிகள், தனியாா் நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக வேலைவாய்ப்பு பெறலாம்.
இந்தப் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்களை வேலூா் கூட்டுறவு மேலாண்மை நிலையம், 9-ஆவது கிழக்கு குறுஞ்சாலை, காந்தி நகா், வேலூா்-632006 என்ற முகவரியை தொடா்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, 0416-3557075 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.