ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் சொா்க்கவாசல் திறப்பு
ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் (பெருமாள்) கோயிலில் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 31- ஆம் தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. பகல் பத்து நிகழ்ச்சி வியாழக்கிழமை நிறைவடைந்ததையடுத்து, மாலை பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன், மோகினி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விழாவின் முக்கிய நிகழ்வான சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அதிகாலை திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சியுடன் தொடங்கியது. பின்னா் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு அதிகாலை 5 மணிக்கு சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சொா்க்கவாசல் வழியாக வந்தாா். சொா்க்கவாசல் திறப்பு நிறைவடைந்ததை அடுத்து வரும் 20-ஆம் தேதி வரை ராப்பத்து உற்சவம் நடைபெறும்.