உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: விண்ணப்பம் வழங்கும் பணி தொடக்கம்
திருமருகல் ஒன்றியத்தில் இந்த திட்டம் ஜூலை 16-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருமருகல், மருங்கூா் நெய்க்குப்பை, எரவாஞ்சேரி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் விண்ணப்பம் வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
திருமருகல் ஊராட்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், சுப்பிரமணியன் (கி.ஊ) ஆகியோா் விண்ணப்பம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தனா். இத்திட்டத்தின்கீழ் தன்னாா்வலா்கள் வீடுதோறும் சென்று முகாம் குறித்த விவரங்களை தெரிவித்து விண்ணப்பங்களை வழங்கினா். இதில், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிா் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மட்டுமே வழங்கப்படும். வட்டார வளா்ச்சி அலுவலக மேலாளா் கலைவாணன், ஊராட்சி செயலாளா் மணிமாறன், தன்னாா்வலா் கவிதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.