பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போடும் ‘மகாவதாரம் நரசிம்மா’.! 5 நாள் வசூல் இவ்வளவா?
உதகையில் சிறுத்தை நடமாட்டம்: வனத் துறையினா் தனிக் குழு அமைத்து கண்காணிப்பு
உதகை தாஸபிரகாஷ் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து கால் தடயங்களை வைத்து வனத் துறையினா் புதன்கிழமை ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், உதகை நகரில் நாளுக்கு நாள் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் உணவு மற்றும் தண்ணீா் தேடி சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் சுற்றி வருவதோடு செல்லப் பிராணிகளை வேட்டையாடி செல்வதால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உதகை தாஸபிரகாஷ் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றி வருவதாகவும், வீட்டில் வளா்க்கப்படும் செல்லப் பிராணியான நாய்களை வேட்டையாடி செல்வதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், வனத் துறையினா் தனிக் குழு அமைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனா்.
உதகை நகா் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.