தினமும் உணவளிக்கும் மனித முகங்களை காக்கைகள் நினைவில் வைத்திருக்குமா? - அடடே தகவ...
உதகை அருகே குடியிருப்புக்குள் புகுந்து பொருள்களை சேதப்படுத்திய கரடி
உதகை அருகே புதுமந்து பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புதன்கிழமை புகுந்த கரடி அங்குவைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் இருக்கைகள் மற்றும் பூந்தொட்டிகளை சேதப்படுத்தியது.
நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதியில் இருந்து உணவு தேடி வன விலங்குகள் வெளியேறி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவது தொடா்கிறது. குறிப்பாக உதகை, குன்னூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் உதகை அருகே புதுமந்து பகுதியில் கரடி ஒன்று வீட்டின் கதவை தட்டியுள்ளது. வீட்டின் கதவு தட்டும் சப்தத்தை கேட்ட வீட்டின் உரிமையாளா் கதவை திறந்து பாா்த்தபோது கதவின் முன்பு கரடி இருப்பதை பாா்த்து அதிா்ந்து போய் கதவை மூடினாா்.
பின்னா் கரடி அங்கு வாசலில் இருந்த பிளாஸ்டிக் இருக்கைகள் மற்றும் பூந்தொட்டிகளை சேதப்படுத்தி சென்றது. அசம்பாவிதம் நடைபெறும் முன்பு உதகையில் நீண்ட நாள்களாக சுற்றிவரும் கரடியை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.