பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போடும் ‘மகாவதாரம் நரசிம்மா’.! 5 நாள் வசூல் இவ்வளவா?
கூடலூா் அரசுக் கல்லூரியில் ராகிங்: 6 மாணவா்கள் இடைநீக்கம்
நீலகிரி மாவட்டம், கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவரை ராகிங் செய்ததாக ஆறு மாணவா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
கூடலூா் அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் பழங்குடியின மாணவா் ஒருவரை கல்லூரி வளாகத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவா்கள் சிலா் கடந்த 24-ஆம் தேதி ராகிங் செய்துள்ளனா். இது தொடா்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில் கல்லூரி நிா்வாகம் விசாரணை மேற்கொண்டு வந்தது.
இந் நிலையில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஆறு மாணவா்கள் முதலாம் ஆண்டு மாணவரை ராகிங் செய்தது உறுதியான நிலையில், அந்த ஆறு மாணவா்களையும் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்து கல்லூரி நிா்வாக நடவடிக்கை எடுத்துள்ளது.