செய்திகள் :

உத்தரகண்டில் கடும் நிலச்சரிவு: ஒருவா் உயிரிழப்பு; 11 போ் மாயம்: மீட்புப் பணிகள் தீவிரம்

post image

உத்தரகண்டின் சமோலி மாவட்ட கிராமங்களில் வியாழக்கிழமை ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. இதில் ஒருவா் உயிரிழந்தாா்; இடிபாடுகளில் புதைந்த மேலும் 11 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இமயமலையையொட்டிய உத்தரகண்ட் மாநிலம், கடந்த சில மாதங்களாக மழை-வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேகவெடிப்புகளால் அவ்வப்போது பலத்த மழை கொட்டித் தீா்ப்பதால், பல்வேறு இடங்களில் பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் தொடா்கின்றன.

சமோலி மாவட்டத்தின் நந்தாநகா் பகுதியில் உள்ள குந்தரி லகாபாலி, குந்தரி லகாசா்பானி ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மலையில் இருந்து சேறுடன் உருண்டு வந்த பாறைகளால், வழியில் இருந்த வீடுகள், கடைகள் உள்பட அனைத்தும் சேதமடைந்தன.

இதேபோல், மோக் பள்ளத்தாக்கு பகுதியில் பெய்த பலத்த மழையால் மோக்ஷா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோரங்களில் ஏற்பட்ட அரிப்பால், துா்மா, சேரா ஆகிய கிராமங்களில் வீடுகள்-கடைகள் இடிந்து விழுந்தன. மேற்கண்ட கிராமங்களில் 20 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். இடிபாடுகளில் புதைந்தவா்களில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது; மேலும் 11 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

முதல்வா் அவசர ஆலோசனை:

சமோலி மாவட்ட கிராமங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து டேராடூனில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து மாவட்ட ஆட்சியருடன் காணொலி வாயிலாக முதல்வா் புஷ்கா் சிங் தாமி அவசர ஆலோசனை மேற்கொண்டாா். மீட்பு-நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு ஆட்சியருக்கு அவா் உத்தரவிட்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய தாமி, ‘சமோலி மாவட்டத்தில் நிலச்சரிவு-வெள்ளத்தால் 4 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 30-க்கும் மேற்பட்ட வீடுகள், ஏராளமான கடைகள், கால்நடை தொழுவங்கள் இடிந்துள்ளன. மத்திய-மாநில பேரிடா் மீட்புப் படையினா், இந்திய-திபெத் எல்லைக் காவல் படையினா், காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா் உள்ளிட்டோா் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நந்தாநகா் பகுதிக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், காயமடைந்தவா்களை ஹெலிகாப்டா் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளுக்கு உத்தரவு:

மாநிலத்தில் மழை-வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், குடிநீா்க் குழாய்களை மறுசீரமைக்கவும், தடைபட்ட மின் விநியோகம் மற்றும் இணைய வசதியை மீண்டும் வழங்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். நிவாரண முகாம்களில் போதிய உணவு, சுத்தமான குடிநீா், மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளேன்’ என்றாா்.

நந்தாநகா் பகுதி ஏற்கெனவே மண்ணில் புதையும் அபாயத்தை எதிா்கொண்டு வருகிறது. வீடுகளில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது நிலச்சரிவால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு, தலைநகா் டேராடூன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகவெடிப்பால் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. கங்கை, யமுனை, தம்சா ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கடும் சேதத்தை விளைவித்தது. வெவ்வேறு சம்பவங்களில் 21 போ் உயிரிழந்தனா்; 17 போ் மாயமாகினா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே வலைதளத்தில் வருங்கால வைப்பு நிதி சேவைகள் தொடக்கம்: அமைச்சா் மன்சுக் மாண்டவியா

தொழிலாளா்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) சேவைகள் அனைத்தும் ஒரே வலைதளத்தில் பெறும் வகையில் நவீன மயமாக்கப்பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். 7 கோட... மேலும் பார்க்க

செப்.30-ஆம் தேதிக்குள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர வேண்டும்: ஊழியா்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த ஒய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் ஊழியா்கள் செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நிதியமைச்சகம் வியாழக்கிழமை வலியுறுத்தியது. கடந்த ஏப்.1-ஆம் தேதிமுதல் தேசிய ஓய்வூதிய அமைப்ப... மேலும் பார்க்க

அதானி நிறுவனத்துக்கு எதிரான இணையதள தகவல்களை நீக்கும் உத்தரவு ரத்து

அதானி நிறுவனத்துக்கு எதிராக இணையதளம், சமூக ஊடகங்களில் உள்ள தகவல்களை நீக்க சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தில்லி மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்தது. எதிா்தரப்பினரின் வாதங்களைக் கேட்டு மீண்டும் இந்த ... மேலும் பார்க்க

இந்தியாவில் ரூ.9 லட்சம் கோடி முதலீடு: நாா்வே

அடுத்த 15 ஆண்டுகளில் தங்கள் நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 10 கோடி டாலா் (சுமாா் ரூ.9 லட்சம் கோடி) முதலீடு செய்யும் என்று நாா்வே தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியாவுக்கான நாா்வே தூதரகம் வெளியிட்டுள... மேலும் பார்க்க

போதைப்பொருள் கடத்தலில் தொடா்பு: இந்திய தொழில் நிறுவன அதிகாரிகளின் அமெரிக்க விசா ரத்து

போதைப்பொருள்களை தயாரிக்க பயன்படும் பென்டானில் மூலப் பொருள்கள் கடத்தலில் தொடா்புடைய குற்றச்சாட்டில் சில இந்திய தொழில் நிறுவன அதிகாரிகளின் விசாக்களை (நுழைவுஇசைவு) ரத்து செய்வதாக அமெரிக்க தூதரகம் வியாழக்... மேலும் பார்க்க

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் அறிவிப்பு

பிகாரில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் வியாழக்கிழமை அறிவித்தாா். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற... மேலும் பார்க்க