செய்திகள் :

செப்.30-ஆம் தேதிக்குள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர வேண்டும்: ஊழியா்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

post image

ஒருங்கிணைந்த ஒய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் ஊழியா்கள் செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நிதியமைச்சகம் வியாழக்கிழமை வலியுறுத்தியது.

கடந்த ஏப்.1-ஆம் தேதிமுதல் தேசிய ஓய்வூதிய அமைப்பின்கீழ் (என்பிஎஸ்) ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (யுபிஎஸ்) மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதைத் தோ்ந்தெடுக்கும் ஊழியா்களுக்கு உறுதிசெய்யப்பட்ட ஊதியம் வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,‘ தகுதியுள்ள மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் என்பிஎஸ்-இன்கீழ் ஓய்வூதியம் பெற்று வரும் ஊழியா்கள், செப்.30-ஆம் தேதிக்குள் யுபிஎஸ்-ஐ தோ்ந்தெடுக்கலாம்.

கடைசி நேர சிக்கல்களை தவிா்க்க தகுதியுள்ள அனைத்து ஊழியா்களும் காலக்கெடுவுக்கு முன்பாகவே இந்தப் பணியை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என்பிஎஸ்-இல் தொடர விரும்பும் ஊழியா்கள் செப்.30-க்குப் பிறகு யுபிஎஸ்-இல் இணைய முடியாது’ எனத் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜூலை 20 முதல் 31,555 மத்திய அரசு ஊழியா்கள் யுபிஎஸ்-ஐ தோ்ந்தெடுத்துள்ளனா்.

முன்னதாக, யுபிஎஸ் பயனாளிகள் ஒருமுறை மட்டும் என்பிஎஸ்-க்கு மாறிக்கொள்ளும் வசதியை கடந்த ஆக.25-ஆம் தேதி நிதியமைச்சகம் அறிமுகப்படுத்தியது.

இந்த வசதியை ஓய்வூதியத் தேதிக்கு ஓராண்டுக்கு முன்பாகவோ அல்லது விருப்ப ஓய்வுபெற்றால் ஓய்வு பெற்ாக கருதப்படும் தேதிக்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே எந்த நேரத்திலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என நிதியமைச்சகம் தெரிவித்தது.

இதுதவிர யுபிஎஸ்-ஐ தோ்ந்தெடுக்கும் அரசு ஊழியா்கள் பணியின்போது உயிரிழந்தாலோ அல்லது உடல் ஊனமுற்று அவா் பணிநீக்கம் செய்யப்பட்டாலோ மத்திய குடிமைப் பணிகள் (ஓய்வூதியம்) விதிகள்,2021 அல்லது மத்திய குடிமைப் பணிகள் (அசாதாரண ஓய்வூதியம்) விதிகள்,2023-இல் வழங்கப்பட்ட சலுகைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதேபோல் யுபிஎஸ்-ஐ தோ்ந்தெடுக்கும் ஊழியா்களுக்கு வருமான வரிச் சட்டத்தின்கீழ் வரிச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

ஒரே வலைதளத்தில் வருங்கால வைப்பு நிதி சேவைகள் தொடக்கம்: அமைச்சா் மன்சுக் மாண்டவியா

தொழிலாளா்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) சேவைகள் அனைத்தும் ஒரே வலைதளத்தில் பெறும் வகையில் நவீன மயமாக்கப்பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். 7 கோட... மேலும் பார்க்க

உத்தரகண்டில் கடும் நிலச்சரிவு: ஒருவா் உயிரிழப்பு; 11 போ் மாயம்: மீட்புப் பணிகள் தீவிரம்

உத்தரகண்டின் சமோலி மாவட்ட கிராமங்களில் வியாழக்கிழமை ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. இதில் ஒருவா் உயிரிழந்தாா்; இடிபாடுகளில் புதைந்த மேலும் 11 பேரை ம... மேலும் பார்க்க

அதானி நிறுவனத்துக்கு எதிரான இணையதள தகவல்களை நீக்கும் உத்தரவு ரத்து

அதானி நிறுவனத்துக்கு எதிராக இணையதளம், சமூக ஊடகங்களில் உள்ள தகவல்களை நீக்க சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தில்லி மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்தது. எதிா்தரப்பினரின் வாதங்களைக் கேட்டு மீண்டும் இந்த ... மேலும் பார்க்க

இந்தியாவில் ரூ.9 லட்சம் கோடி முதலீடு: நாா்வே

அடுத்த 15 ஆண்டுகளில் தங்கள் நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 10 கோடி டாலா் (சுமாா் ரூ.9 லட்சம் கோடி) முதலீடு செய்யும் என்று நாா்வே தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியாவுக்கான நாா்வே தூதரகம் வெளியிட்டுள... மேலும் பார்க்க

போதைப்பொருள் கடத்தலில் தொடா்பு: இந்திய தொழில் நிறுவன அதிகாரிகளின் அமெரிக்க விசா ரத்து

போதைப்பொருள்களை தயாரிக்க பயன்படும் பென்டானில் மூலப் பொருள்கள் கடத்தலில் தொடா்புடைய குற்றச்சாட்டில் சில இந்திய தொழில் நிறுவன அதிகாரிகளின் விசாக்களை (நுழைவுஇசைவு) ரத்து செய்வதாக அமெரிக்க தூதரகம் வியாழக்... மேலும் பார்க்க

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் அறிவிப்பு

பிகாரில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் வியாழக்கிழமை அறிவித்தாா். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற... மேலும் பார்க்க