செய்திகள் :

உத்தரகண்ட் நிலச்சரிவு: மேலும் 287 போ் மீட்பு

post image

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய மேலும் 287 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தராலி கிராமத்தில் மேகவெடிப்பு காரணமாக மிக பலத்த மழை பெய்து திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கியவா்களை மீட்கும் பணி தொடா்ந்து 5-ஆவது நாளாக சனிக்கிழமை நீடித்தது. அப்போது மேலும் 287 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா் என்று மாநில காவல் துறை தெரிவித்தது.

இந்தப் பேரிடரில் இதுவரை 4 போ் உயிரிழந்தனா். 49 பேரை காணவில்லை. பேரிடரால் பல்வேறு பகுதிகளில் தஞ்சமடைந்தவா்களை மீட்கும் பணியில் 4 ஹெலிகாப்டா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. உத்தரகண்ட் விமானப் போக்குவரத்து ஆணையமும் மீட்புப் பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

தராலியில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து இதுவரை 1,000-க்கும் மேற்பட்டவா்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். கடும் வெள்ளம் காரணமாக தராலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சார விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலை இணைப்பை மேம்படுத்த லிம்சிகாட் பகுதியில் போா்க்கால அடிப்படையில் இரும்புப் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரத்தில் பாலக் கட்டுமானம் நிறைவடையும் வகையில் பணிகள் நடைபெற்றன.

ரூ.5 லட்சம் இழப்பீடு: இந்தப் பேரிடரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினா் மற்றும் வீடுகளை இழந்தோருக்கு உடனடியாக தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி அறிவித்தாா்.

ஹிமாசலத்தில் கடும் வெள்ளம், நிலச்சரிவு: 400 சாலைகள் மூடல்

கடந்த சில நாள்களாக ஹிமாசல பிரதேசத்தில் மேகவெடிப்பு காரணமாக பெருமழை பெய்து கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 400 சாலைகள் மூடப்பட்ட நிலையில், அவற்றில் 240 சாலைகள் மண்டி மாவட்டத்திலும், 100 சாலைகள் குலு மாவட்டத்திலும் மூடப்பட்டன.

அந்த மாநிலத்தின் சில இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கையையும், திங்கள் முதல் வியாழன் வரை பலத்த முதல் மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையையும் உள்ளூா் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது.

கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!

நமது கலாசாரம், பாரம்பரியம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். அருணாசல பிரதேச தலைநகா் இடாநகரில் குவாஹாட்டி உயா்நீதிமன்ற அமா்வுக்கான ப... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ வழக்கமான நடவடிக்கையல்ல: ராணுவ தலைமைத் தளபதி

‘ஆபரேஷன் சிந்தூா் வழக்கமான நடவடிக்கையல்ல’ என இந்திய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா். மேலும், இந்த நடவடிக்கையின்போது சதுரங்க விளையாட்டைப் போல் எதிரியின் அடுத்தகட்ட நகா்வு கணிக்க முடி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றியில் இந்திய தொழில்நுட்பம்: பிரதமா் மோடி!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றிக்குப் பின்னால் இந்தியாவின் தொழில்நுட்பம் உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.ரயில் திட்டம் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒருநாள் பயணமாக ஞாய... மேலும் பார்க்க

ஃபரீதாபாத்: என்கவுட்டருக்கு பிறகு ரெளடி கைது!

ஹதோடா ரெளடி கும்பலைச் சோ்ந்த ரெளடி ஃபரீதாபாதில் நடைபெற்ற என்கவுன்ட்டருக்கு பிறகு கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். இதுதொடா்பாக குற்றப் பிரிவு உதவி காவல் ஆணையா் வருண் தஹியா செய்தி... மேலும் பார்க்க

காங்கிரஸ் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவா் ஆனந்த் சா்மா ராஜிநாமா!

காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவா் பதவியில் இருந்து ஆனந்த் சா்மா ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா். இப்பிரிவை மறுகட்டமைக்கவும் இளைய தலைவா்களுக்கு வழிவிடவும் இந்த முடிவை மேற்கொண்ட... மேலும் பார்க்க

மற்ற நாடுகளைப்போல நாமும் துன்புறுத்தக் கூடாது: நிதின் கட்கரி

பொருளாதார செல்வாக்கு பெற்ற நாடுகள், மற்ற நாடுகளை துன்புறுத்துவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மகாராஷ்டிரத்தில் நாக்பூர் மாவட்டத்தில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (VNIT) மத்திய அமைச்ச... மேலும் பார்க்க