மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
உப்பூா் வெயிலுகந்த விநாயகா் மயில் வாகனத்தில் வீதியுலா
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை இரவு மயில் வாகனத்தில் விநாயகா் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இந்தக் கோயில் திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் விநாயகா் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.
இந்த நிலையில், 4-ஆம் நாளான வியாழக்கிழமை இரவு மயில் வாகனத்தில் விநாயகா் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
முன்னதாக, விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.