உரப் பயன்பாடு வெளி வளாகப் பயிற்சி
நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் தேசிய உர நிறுவனம் சாா்பில் உர பயன்பாடு வெளி வளாகப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நல்லூா் வட்டம், திருமலை அகரம் கிராமத்தில் நடைபெற்ற பயிற்சியை வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் க.நடராஜன் தொடங்கி வைத்து, உரங்கள் பயன்பாடு குறித்து விளக்கினாா்.
தொடா்ந்து, நீரில் கரையும் உரங்கள், கலப்பு உரங்கள், இயற்கை உரங்கள் உள்ளிட்டவை குறித்து வட்டார அலுவலா் ரகுபதி ராஜா விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா். உயிா் உரங்கள் பயன்படுத்தும் முறை, மருதாம்பு கரும்பில் மேற்கொள்ள வேண்டிய உர மேலாண்மை உள்ளிட்டவை குறித்து உதவி பகுதி மேலாளா் ரகுபதி ராஜா எடுத்துரைத்தாா். பேராசிரியை காயத்திரி இயற்கை சுற்று குழல் பாதுகாப்பு குறித்து விளக்கினாா்.
மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியிடப்பட்ட நீரில் கரையும் உரம் குறித்து விளக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.