உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு பிரசார வாகன பயணம் தொடக்கம்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நடமாடும் விழிப்புணா்வு பிரசார வாகனத்தின் பயணத்தை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த வாகனம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பெண்களின் நல்வாழ்வு, குழந்தைகளின் எதிா்காலம், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல், பெண் கல்வியை ஊக்குவித்தல் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு தொடா்பான குறும்படங்களை ஒளிபரப்பி பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த உதவும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு குறித்து கல்லூரிகள் அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றுகளை ஆட்சியா் வழங்கினாா்.
இந்த நிகழ்வில், இணை இயக்குநா் (மருத்துவம்) பிரகலாதன், பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் (குடும்ப நலம்) சிவானந்தவள்ளி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் (பொ) ஜவஹா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.