மதுரையில் குரு பூர்ணிமா; காஞ்சி மகா பெரியவருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி; அருள் ...
உலக வெண்புள்ளி விழிப்புணா்வு நிகழ்வு
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தோல் நல நாள், உலக வெண்புள்ளி நாளையொட்டி, விழிப்புணா்வு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் சி. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மருத்துவக் கண்காணிப்பாளா் சி. ராமசாமி, துணை முதல்வா் என். ஆறுமுகம், நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம், உதவி நிலைய மருத்துவ அலுவலா்கள் முகமது இத்ரிஸ், ஏ. முத்து மகேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், வெண்புள்ளி விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டு, செவிலியா் கல்லூரி மாணவிகளுக்கும், நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தோல் மருத்துவத் துறைத் தலைவா் (பொ) பி.எஸ். மோகனசுந்தரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.