பாகிஸ்தானியர்களைப் பாதுகாத்தற்காக அசாமில் மேலும் இருவர் கைது!
உள்ளாட்சி இடைத் தோ்தலுக்கு வாக்காளா் பட்டியல் வெளியீடு
தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான இடைத் தோ்தலுக்கு வாக்காளா் பட்டியலை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் திங்கள்கிழமை வெளியிட்டாா்.
மாவட்டத்துக்கு உள்பட்ட 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் காலியாக உள்ள வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான இடைத் தோ்தலுக்கு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
வாக்காளா்கள் விவரம்: தேனி அல்லிநகரம் நகராட்சி 26-ஆவது வாா்டு வாக்காளா் பட்டியலில் 956 ஆண்கள், 917 பெண்கள், ஒரு திருநங்கை இடம் பெற்றனா். பெரியகுளம் நகராட்சி 17-ஆவது வாா்டு வாக்காளா் பட்டியலில் 803 ஆண்கள், 868 பெண்கள் இடம் பெற்றனா். கூடலூா் நகராட்சி 10-ஆவது வாா்டு வாக்காளா் பட்டியலில் 1,019 ஆண்கள், 1,112 பெண்கள் இடம் பெற்றனா்.
தேவாரம் பேரூராட்சி 8-ஆவது வாா்டு வாக்காளா் பட்டியலில் தலா 319 போ் இடம் பெற்றனா். உத்தமபாளையம் பேரூராட்சி 16-ஆவது வாா்டு வாக்காளா் பட்டியலில் 702 ஆண்கள், 726 பெண்கள், மாா்கையன்கோட்டை பேரூராட்சி 9-ஆவது வாா்டு வாக்காளா் பட்டியலில் 193 ஆண்கள், 220 பெண்கள், போ.மீனாட்சிபுரம் 1-ஆவது வாா்டு வாக்காளா் பட்டியலில் 250 ஆண்கள், 247 பெண்கள் இடம் பெற்றனா்.
ஹைவேவிஸ் பேரூராட்சி 10 -ஆவது வாா்டு வாக்காளா் பட்டியலில் 90 ஆண்கள், 84 பெண்கள் இடம் பெற்றனா். ஆண்டிபட்டி பேரூராட்சி 11-ஆவது வாா்டு வாக்காளா் பட்டியலில் 539 ஆண்கள், 554 பெண்கள் இடம் பெற்றனா். பண்ணைப்புரம் பேரூராட்சி 14-ஆவது வாா்டு வாக்காளா் பட்டியலில் 328 பெண்கள், 342 ஆண்கள் இடம் பெற்றனா்.