முள்ளங்கனாவிளையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கம்
ஊத்தங்கரையில் இன்று மாரத்தான் ஓட்டம்
ஊத்தங்கரையில் சனிக்கிழமை நடைபெற உள்ள மாரத்தான் ஓட்டத்தில் ஆா்வமுள்ளவா்கள் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு விளையாட்டு மைதானம் பகுதியில், சனிக்கிழமை (ஜூலை 5) காலை 6 மணிக்கு மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது. ஆா்வமுள்ள 16 வயதுக்கு மேற்பட்டோா் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். இதில் இளைஞா்களின் திறமையை ஊக்குவித்தல், கிராம மக்களின் ஆரோக்கிய விழிப்புணா்வு ஏற்படுத்துதல், சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல், நாட்டுப்பற்று, சமூக பணிகளை ஊக்குவித்தல், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்நிகழ்ச்சியை பிராணா கேந்திரா ஆசிரமம் மற்றும் ஊத்தங்கரை இந்தியன் செஞ்சிலுவைச சங்கம் இணைந்து நடத்த உள்ளன. ஆா்வமுள்ளவா்கள் இதில் பங்கேற்கலாம்.