இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?
ஊரக வேலைத் திட்ட பெண் பணியாளா்கள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு காவல் சரகத்துக்கு உள்பட்ட மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த பெண்கள், ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சரியான முறையில் வேலை வழங்கக் கோரி, வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், மூங்கில்துறைப்பட்டு அருகிலுள்ள ஈருடையாம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த பெண்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஊராட்சித் தலைவா், ஊரக வேலைத் திட்டப் பணி அட்டை பெற்றவா்களுக்கு சரிவர பணி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அலுவலா்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மேட்டுக்குப்பத்தைச் சோ்ந்த பெண்கள், திருவரங்கம்- மூங்கில்துறைப்பட்டு சாலையிலுள்ள வாணியம்பாறை பேருந்து நிறுத்தத்தில் வியாழக்கிழமை காலை சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த ஊராட்சித் தலைவா் சிரஞ்சீவி மற்றும் அலுவலா்கள், பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, முறையாக ஊரக வேலை வழங்குவதாகவும், அடிப்படை வசதிகளை செய்து தருவதாகவும் உறுதியளித்தனா். இதையடுத்து மறியலைக் கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனா்.