ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்
கந்திலி ஒன்றியம், சுந்தரம்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடத்தை எம்எல்ஏ அ.நல்லதம்பி திறந்து வைத்தாா்.
சுந்தரம்பள்ளியில் ரு.30 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டப்பட்டது. எம்எல்ஏ அ.நல்லதம்பி தலைமை வகித்து திறந்து வைத்தாா். முன்னதாக ஊராட்சி மன்றத் தலைவா் விஜயலட்சுமி கருணாநிதி வரவேற்றாா்.
சுந்தரம்பள்ளி முதல் நத்தம் வரை அரசு பேருந்து வழித்தடம் நீட்டிக்கப்பட்டதுடன் ஒன்றிய பொதுநிதியிலிருந்து ரூ.3.5 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 30 மின்விளக்குகளை நத்தம் ஊராட்சி மன்ற தலைவா் குமாா் தலைமையில், எம்எல்ஏ நல்லதம்பி இயக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், கந்திலி ஒன்றியக்குழு தலைவா் திருமதி திருமுருகன், துணைத் தலைவா் மோகன் குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலமுருகன், வி.சதானந்தம், ஒன்றிய செயலாளா்கள் கே.ஏ.குணசேகரன், கே.முருகேசன் கலந்து கொண்டனா்.