ஊராட்சிப் பணியாளா்களுக்கு யோகா பயிற்சி
துத்திப்பட்டு ஊராட்சிப் பணியாளா்களுக்கு யோகா தியானம் மனவளக்கலை பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தெலங்கானா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமச்சந்திரா மிஷன் ஆா்ட்ஃபுல் இன்ஸ்டிடியூஷன் யோக பயிற்சியாளா்கள் திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் யோகா விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா்.
இதன் ஒருபகுதியாக நடைபெற்ற முகாமில் துத்திப்பட்டு ஊராட்சியில் துப்புரவு பணியாளா்கள், கணினி இயக்குநா்கள், ஊக்குநா்கள், கணக்காளா்கள் ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ். துணைத் தலைவா் விஜய், வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சி செயலாளா் முரளி ஆகியோா் பங்கேற்றனா். யோகா பயிற்சியாளா்கள் ஜெயபாரதி மற்றும் வினோத்குமாா் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.