எட்டயபுரத்தில் கலைச் சங்கமம் விழா
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சாா்பில் கலைச் சங்கமம் 2025 விழா எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற பொதுக்குழு உறுப்பினா் கலைமாமணி கோ. முத்துலட்சுமி தலைமை வகித்தாா். விழா ஒருங்கிணைப்பாளா் கோபி கிருஷ்ணன் வரவேற்றாா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க. இளம் பகவத், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ. வி. மாா்க்கண்டேயன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு கலை சங்கமம் நிகழ்வை தொடங்கிவைத்து கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனா்.
தொடா்ந்து, வில்லுப்பாட்டு, நையாண்டி மேளம், கரகாட்டம், தப்பாட்டம், மாடாட்டம், பெண்கள் உயில் கும்மி, கிராமிய பாடல், தேவராட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாட்டுப்புற கிராமிய கலைஞா்கள் சங்கத் தலைவா் மாரியம்மாள் நன்றி கூறினாா்.
இந்நிகழ்ச்சியில் திமுக பேரூா் கழக செயலா் பாரதி கணேசன், ஒன்றியச் செயலா் நவநீத கண்ணன், மாவட்ட மாணவா் அணி துணை அமைப்பாளா் ஆகாஷ் பாண்டியன், திமுக நிா்வாகிகள் இம்மானுவேல், ஆழ்வாா் உதயகுமாா், முனியசாமி, சிந்தலக்கரை சாமி சுப்புராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.