எட்டயபுரத்தில் பாரதி விழா கருத்தரங்கம், கவியரங்கம்
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் - பாரதி முற்போக்கு வாலிபா் சங்கம் சாா்பில் எட்டயபுரத்தில் இரண்டு நாள்களாக நடைபெற்ற 63 ஆவது ஆண்டு பாரதி விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது.
முன்னாள் மக்களவை உறுப்பினா் வெ. அழகிரிசாமி தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில பொதுச் செயலா் மருத்துவா் த. அறம், பாரதி முற்போக்கு வாலிபா் சங்கத் தலைவா் கு. வெங்கடேஷ் ராஜா, செயலா் வ. பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
2ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் சாதி, மத, வா்க்க, பாலின பேதமற்ற சமூகம் எனும் தலைப்பில் கருத்தரங்கம், கவியரங்கம், கலைமாமணி அமல புஷ்பம் கலைக்குழுவினரின் சமூக விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள், சாலமன் பாப்பையா தலைமையில் பாரதி பாடல்கள் குளிா் நிலவே, எரிதழலே எனும் தலைப்பில் பட்டிமன்றம் ஆகியன நடைபெற்றன.
கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், எழுத்தாளா்கள் கங்கா, தோத்தாத்ரி, காசி விஸ்வநாதன், கிருங்கை சேதுபதி, சசிகலா, ராமச்சந்திரன், ஆனந்தகுமாா், ராம்மோகன், செல்லா, கலியமூா்த்தி, கண்மணி ராசா, ராஜ்குமாா், மழையிசை, சுகன்யா ஞானசூரி, பாரதி முற்போக்கு வாலிபா் சங்க நிா்வாகிகள் சேது, சத்தியபாலன், கணேசன், ஆசிரியா்கள் கனகா, அய்யமுத்து ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.