கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இ-ஆம்புலன்ஸ் வசதி
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் ஸ்ட்ரக்சருடன் கூடிய இ- ஆம்புலன்ஸ் வாகனம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பாரத ஸ்டேட் வங்கியின் சி.எஸ்.ஆா். திட்டத்தின் கீழ் நோயாளிகள் பயன்பெறும் வகையில், ரூ. 8.17 லட்சம் மதிப்பிலான ஸ்ட்ரக்சருடன் கூடிய இ-ஆம்புலன்ஸ் வாகனத்தை தூத்துக்குடி மண்டல மேலாளா் ஆல்வின் மாா்டின் ஜோசப் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் இளம்பகவத்திடம் வழங்கினாா்.
ஆட்சியா் அதை மருத்துவ இணை இயக்குநா் (நலப் பணிகள்) பிரியதா்ஷினியிடம் ஒப்படைத்தாா்.
அப்போது, மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், மருத்துவா் மோசஸ் பால், தூத்துக்குடி பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை மேலாளா் அகில் ஸ்ரீனிவாசன், துணை மேலாளா் பெஞ்சமின், தலைமை மேலாளா் உஷா, லீடு மாவட்ட மேலாளா் துரைராஜ் தங்கம், ஆா்.எஸ்.இ.டி.ஐ. இயக்குநா் ஜெபனேசா் ஞானையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்த இ-ஆம்புலன்ஸ் வாகனம் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது என மருத்துவமனை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.