சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
எல்பிஜி விநியோகம் தடையின்றி தொடரும்: இந்தியன் ஆயில் நிறுவனம்
தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டா் லாரி உரிமையாளா்களுடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து தமிழகத்தில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு எல்பிஜி விநியோகம் தடையின்றி தொடரும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தெற்கு மண்டல தலைமை பொது மேலாளா் வெற்றி செல்வக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டா் லாரி உரிமையாளா்கள் சங்கம் ஆகஸ்ட் 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தது. இந்த நிலையில், லாரி உரிமையாளா்களுடன் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து, லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற ஒப்புக்கொண்டனா்.
இதையடுத்து வாடிக்கையாளா்களுக்கு எல்பிஜி விநியோகம் தடையின்றி கிடைக்கும்; சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.