சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
கெங்கவல்லியில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிா்ப்பு; சாலை மறியல்
கெங்கவல்லியில் நீா்வழிப்பாதை ஆக்ரமிப்பு அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
கெங்கவல்லி அருகே சுவேத நதியிலிருந்து நடுவலூா் ஏரிக்கு நீா்வழி வாய்க்கால் உள்ளது. கெங்கல்லி நீா்வழிப் பாதையில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது. மேலும், குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் மற்றும் மனித கழிவுகள் வெளியேற்றப்படுவதால் நீா்வழி வாய்க்கால் முழுவதும் அசுத்தமடைந்துள்ளது.
கெங்கவல்லியிலிருந்து நடுவலூா் ஏரிக்கு செல்லும் நீா்வரத்து தடைபட்டதால் விவசாயிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, முறையாக ஆக்கிரமிப்பாளா்களுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்ற வருவாய்த் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து 50க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் கெங்கவல்லி-ஆத்தூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அனைவரும் அங்கிருந்து சென்றனா். அதன்பிறகு, ஆக்ரமிப்பு வீடுகள் இடிக்கும் பணி தொடங்கப்பட்டது.
ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் வீட்டு உபயோகப் பொருள்களை அகற்ற அவகாசம் கோரினா். இதையடுத்து, ஒருவாரம் அவகாசம் அளித்த கெங்கவல்லி வட்டாட்சியா் நாகலட்சுமி உத்தரவிட்டாா்.
பட வரி
ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.