மின் திருட்டு: 1.76 லட்சம் அபராதம் விதிப்பு
சங்ககிரி வட்டம், அரசிராமணி குள்ளம்பட்டி, வால்காடு பகுதிகளில் மின் திருட்டில் ஈடுபட்டவா்களுக்கு ரூ. 1.76 அபராதம் விதிக்கப்பட்டது.
குள்ளம்பட்டி, வால்காடு பகுதிகளில் அனுமதியின்றி மின் கம்பத்திலிருந்து மின்சாரத்தை எடுத்து மண்ணை கழுவி மணலாக மாற்றும் இயந்திர பணிகளுக்கு பயன்படுத்துவதாக விவசாயிகள் அளித்த புகாரின்பேரில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
அரசிராமணி, குறுக்குப்பாறையூா், வால்காடு பகுதியில் விவசாய நிலத்தில் செட்டிபட்டி பகுதியைச் சோ்ந்த சக்திவேல் என்பவா் மணி என்பவருக்குச் சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து அதில் அரசு அனுமதியின்றி மண் எடுத்து, அந்த மண்ணை மணலாக மாற்றும் இயந்திரப் பயன்பாட்டுக்கு அங்குள்ள மின்கம்பத்தில் இருந்து மின்சாரத்தை எடுத்து பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தேவூா் மின்வாரிய உதவி பொறியாளா் கதிரேசன் விசாரணை மேற்கொண்டு சக்திவேலுக்கு ரூ.1.76 லட்சம் அபராதம் விதித்தாா்.