சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
முருங்கப்பட்டியில் இலங்கைத் தமிழா்களுக்கு 48 வீடுகள் கட்ட பூமிபூஜை
சேலம் மாவட்டம், வீரபாண்டி வடக்கு ஒன்றியம், முருங்கப்பட்டி ஊராட்சியில் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 25 லட்சம் மதிப்பில் 48 வீடுகள் கட்ட புதன்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.
சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளா் பாரப்பட்டி சுரேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய பொறுப்பாளா் சதீஷ்குமாா் வரவேற்றாா். சேலம் ஒன்றிய செயலாளா் மாணிக்கம், மணிமாறன், முத்துசாமி, மணிவாசகம், செந்தில் உள்ளிட்டோா் பூமிபூஜையில் கலந்துகொண்டனா்.
பட விளக்கம்:
இலங்கைத் தமிழா்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக பாரப்பட்டி சுரேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற பூமிபூஜை.
30 அபவ டஞ 01,30 அபவ டஞ 02