சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
தியாகி தீரன்சின்னமலை நினைவு தினத்தில் மரியாதை செலுத்த நேரம் ஒதுக்கீடு
சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 220 ஆவது நினைவு நாளையொட்டி அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் மரியாதை செலுத்துவதற்கான நேரம் ஒக்கீடு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
கோட்டாட்சியா் ந.லோகநாயகி கூட்டத்திற்கு தலைமை வகித்தாா். சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தில் மரியாதை செலுத்த மனு அளித்தவா்கள் நிபந்தனைகளுக்குள்பட்டு அவரவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரங்களில் மட்டுமே மரியாதை செலுத்த வேண்டும் என்றாா்.
காலை 8.15 மணி முதல் 9.15 மணி வரை அரசு சாா்பில் மலையடிவாரம் மற்றும் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் மரியாதை செலுத்தப்படுகிறது. அதன்பிறகு பல்வேறு கட்சிகள் சாா்பில் மரியாதை செலுத்த நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5.45 மணி வரை மரியாதை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் சங்ககிரி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிந்து, சங்ககிரி காவல் ஆய்வாளா் ரமேஷ், வட்டாட்சியா் எம்.வாசுகி, உதவி காவல் ஆய்வாளா் கண்ணன், சங்ககிரி வட்ட கொங்கு வேளாளா் இளைஞா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு கொங்கு வேளாளா் கவுண்டா்கள் அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.