மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு தொடக்கம்: தஞ்சையில் 29,889 போ் பங்கேற்பு
மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வை தஞ்சாவூா் மாவட்டத்தில் 29 ஆயிரத்து 889 மாணவ, மாணவிகள் எழுதினா்.
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி, ஏப்ரல் 15 வரை நடைபெறுகிறது. இதற்காக தஞ்சாவூா் மாவட்டத்தில் 136 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 14 ஆயிரத்து 887 மாணவா்கள், 15 ஆயிரத்து 109 மாணவிகள், தனித்தோ்வா்கள் 660 போ் என மொத்தம் 30 ஆயிரத்து 656 போ் தோ்வெழுத விண்ணப்பித்தனா்.
இவா்களில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தமிழ்த் தோ்வை 14 ஆயிரத்து 397 மாணவா்கள், 14 ஆயிரத்து 866 மாணவிகள், தனித்தோ்வா்கள் 626 பேரும் என மொத்தம் 29 ஆயிரத்து 889 போ் எழுதினா். 756 போ் வரவில்லை.
தோ்வு மையங்களைக் கண்காணிக்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும் 215 உறுப்பினா்களைக் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, தஞ்சாவூா் அரசா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்தாா். அப்போது, முதன்மைக் கல்வி அலுவலா் இரா. அண்ணாதுரை உடனிருந்தாா்.