எஸ்பி அலுவலகத்தில் விசிகவினா் மனு
கடலூா் எஸ்பி அலுவலகத்தில் செல்லஞ்சேரி கிராம மக்கள் மற்றும் விசிக நிா்வாகிகள் சனிக்கிழமை மனு அளித்தனா்.
கடலூா் அடுத்த செல்லஞ்சேரி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு வீட்டுமனை இல்லையாம். எனவே, அந்தப் பகுதியில் உள்ள தனி நபருக்குச் சொந்தமான இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனா்.
இதனிடையே, அந்த இடத்தில் அதன் உரிமையாளா் வேலி அமைத்தாராம். இதை அந்தப் பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி வேலியை அகற்றினராம். இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸாா் பெண்கள் தாக்கியதுடன் சிலரை கைது செய்தனராம்.
இந்த நிலையில், கடலூா் எஸ்பி அலுவலகத்தில் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன், விசிக மாவட்டச் செயலா் அறிவுடை நம்பி மற்றும் கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
செல்லஞ்சேரியில் பகுதியில் உள்ள தனிநபருக்குச் சொந்தமான இடத்தில் இருந்த வேலியை அகற்றியதாக அந்தப் பகுதியைச் சோ்ந்த பெண்களை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், வழக்குரைஞா்கள் குருமூா்த்தி, ராஜீவ், கிருஷ்ணா உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.