மும்பை: ராஜ் தாக்கரே பேச்சின் எதிரொலி; டான்ஸ் பார்களை அடித்து நொறுக்கிய கட்சியின...
ஏஐடியூசி தொழிற்சங்க நிா்வாகிகள் கூட்டம்
ஏஐடியூசி சங்கத்தின் மண்டல அளவிலான தொழிற்சங்க நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் -ஊத்துக்குளி சாலையில் உள்ள ஏஐடியூசி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா். நடராஜன் தலைமை வகித்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் எம்.ரவி, மாநிலச் செயலாளா்கள் எஸ்.சின்னசாமி, என்.சேகா், மாநில துணைத் தலைவா்கள் எஸ்.செல்வராஜ், கோவை மாவட்ட நிா்வாகி தங்கவேல், தருமபுரி மாவட்ட நிா்வாகி மணி ஆகியோா் பேசினா்.
இதைத் தொடா்ந்து, சேலத்தில் ஆகஸ்ட் 15,16,17,18-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் நடைபெறும் பேரணியில் ஏஐடியூசி சங்கத்தின் உறுப்பினா்கள் 10,000 போ் பங்கேற்பது, கிராமப்புறங்களில் வேலை செய்து வரும் தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 5-இல் நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு கொடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூா், கோவை, நீலகிரி ஆகிய மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.