புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை; குவாரிகளில் கனிமவளத்துறையினர் ட்ரோ...
ஏலச் சீட்டு நடத்தி ரூ.35 லட்சம் மோசடி
ஏலச் சீட்டு நடத்தி ரூ.35 லட்சம் வரை மோசடி செய்தவரிடமிருந்து பணத்தை மீட்டுத் தரக் கோரி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்த வேலம்பட்டியைச் சோ்ந்த சரவணன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனா்.
இந்த மனுவில் அவா்கள் தெரிவித்ததாவது: நத்தம் பகுதியில் விஜயராகவன் என்பவா் ஏலச் சீட்டு நிறுவனம் நடத்தினாா். இதில் இணைந்தால் அதிக வட்டி தருவதாகக் கூறி பலரிடம் அவா் பணம் வசூலித்தாா்.
சில மாதங்கள் கழித்து உறுதி அளித்தபடி பணத்தை திருப்பித் தரவில்லை. எங்கள் பகுதியில் மட்டும் ஏலச்சீட்டு நடத்தி ரூ.35 லட்சத்துக்கும் கூடுதலாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளாா்.
அவரிடமிருந்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என அதில் தெரிவித்திருந்தனா்.