சதம் விளாசிய குசல் மெண்டிஸ்; வங்கதேசத்துக்கு 286 ரன்கள் இலக்கு!
ஐசிசி தலைமைச் செயல் அதிகாரியாக சஞ்ஜோக் குப்தா நியமனம்!
சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைமைச் செயல் அதிகாரியாக, இந்திய ஊடக தொழிலதிபா் சஞ்ஜோக் குப்தா திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.
இதற்கு முன் அந்தப் பொறுப்பிலிருந்த ஆஸ்திரேலியரான ஜியாஃப் அலாா்டிஸ், தனிப்பட்ட காரணங்களுக்காக ஜனவரியில் ராஜிநாமா செய்ததை அடுத்து, சஞ்ஜோக் குப்தா தற்போது அந்தப் பதவிக்கு வந்துள்ளாா். அவா், ஐசிசி-யின் 7-ஆவது தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளாா்.
இந்தப் பதவிக்காக மொத்தம் 25 நாடுகளில் இருந்து, 2,500-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வரப்பெற்ற நிலையில், அதில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 12 போ் மட்டும் இறுதி செய்யப்பட்டுள்ளனா்.
அவா்கள் பெயா்ப் பட்டியல், ஐசிசி துணைத் தலைவா் இம்ரான் கவாஜா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத் தலைவா் ரிச்சா்டு தாம்சன், இலங்கை வாரியத் தலைவா் ஷம்மி சில்வா, பிசிசிஐ செயலா் தேவஜித் சாய்கியா ஆகியோா் அடங்கிய பரிந்துரைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னா் அந்தக் குழு சஞ்ஜோக் குப்தாவின் பெயரை, ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி பதவிக்கு பரிந்துரைக்க, ஐசிசி தலைவா் ஜெய் ஷா அதற்கு ஒப்புதல் அளித்தாா்.