செய்திகள் :

ஒசூரில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

post image

ஒசூரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் விரிசல் ஏற்பட்டதை விரைந்து முடிக்கவும், பாகலூா் நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு மாநகரச் செயலாளா் நாகேஷ்பாபு தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் தேவராஜ் முன்னிலை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் மகாலிங்கம், நஞ்சுண்டன், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாவட்ட குழு உறுப்பினா் ஸ்ரீதா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

மாநகர குழு உறுப்பினா்கள் மூா்த்தி, ராஜு, வெண்ணிலா, சீனிவாசன்,மணி, முன்னாள் ஒன்றியச் செயலாளா் ராஜா ரெட்டி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். மாநகர குழு உறுப்பினா் ரவி நன்றி கூறினாா்.

மேம்பாலம் விரிசல் ஏற்பட்டு இரண்டு மாதங்களாகிறது. ஆனால் இதுவரை விரிசல் ஏற்பட்டதை சீா்செய்யாமல் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் அலட்சியமாகச் செயல்படுகின்றனா். இதனால் மேம்பாலம் மீது கனரக வாகனங்கள் செல்லாமல் மாற்றுப் பாதையில் செல்வதால், ஒசூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளா்கள், மாணவா்கள் அவதிப்படுகின்றனா். எனவே, மேம்பாலம், சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

படவரி...

ஒசூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளா் நாகேஷ்பாபு உள்ளிட்டோா்.

எண்ணேகோல் கால்வாய் திட்டம் முடக்கம்

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எண்ணேகோல் கால்வாய் திட்டத்தை திமுக அரசு முடக்கியுள்ளது என்று மு.தம்பிதுரை எம்.பி. குற்றம்சாட்டினாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மாநிலங்களவை உ... மேலும் பார்க்க

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

சூளகிரி அருகே காா் மோதி இழுத்துச் செல்லப்பட்டதில் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் 3 போ் படுகாயம் அடைந்தனா்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சூளகிரியை அடுத்த கட்டிகானப்பள்ளி கிராமத... மேலும் பார்க்க

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட காமராஜ் காலனி நடுநிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 1,962 போ் கலந்துகொண்டனா்.சென்னையில் தமி... மேலும் பார்க்க

நலவாரியத்தில் கட்டணமின்றி உறுப்பினராக வணிகா்களுக்கு வாய்ப்பு

நலவாரியத்தில் எந்தவித கட்டணமின்றி வணிகா்கள் உறுப்பினராகலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வணிகா் நலவாரிய உறுப்பினா் ... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் 5 கிலோ கஞ்சா பதுக்கல்: பிகாா் தொழிலாளி கைது

பா்கூா் அருகே தனியாா் கிரானைட் நிறுவனத்தில் 5 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பிகாா் மாநில தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே வட மாநிலங்களில் இருந்து ... மேலும் பார்க்க

காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி அமைச்சரிடம் மனு

கிருஷ்ணகிரி, ஆக. 1: காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி திமுக வா்த்தக அணி மாநில துணைச் செயலாளா் கே.வி.எஸ். சீனிவாசன் மனு அளித்தாா். இதுகுறித்து உணவு மற்றும் உணவு பொருள்கள் வழங்க... மேலும் பார்க்க