சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பலி!
ஒசூா் கால்நடை பண்ணையில் 60 கால்நடைகள் ஏலம்
ஒசூா் கால்நடைப் பண்ணையில் கழிவு செய்யப்பட்ட 60 கால்நடைகள் ஏலம் விடப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி கால்நடை பராமரிப்புத் துறை, மாவட்ட கால்நடை ஒசூா் பண்ணையில் கழிவு செய்யப்பட்ட 60 கால்நடைகளை மே 15 ஆம் தேதி காலை 10 மணியளவில் ஏலக் குழுவினா் முன்னிலையில் பொது ஏலம் விடப்படவுள்ளது.
மேற்படி ஏலத்தில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் டேவணித் தொகையாக ரூ. 10,000 மதிப்பிலான வங்கி வரைவோலையை தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து பெற்று மாவட்ட கால்நடை பண்ணையில் துணை இயக்குநா் அலுவலகத்தில் 14.05.2025 அன்று மாலை 5 மணிக்குள் நேரில் சமா்ப்பிக்க வேண்டும்.
மேற்படி டேவணித் தொகையானது வங்கி வரைவோலையாக மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். பொது ஏலம் தொடா்பான கூடுதல் விவரங்கள் தேவைப்படின் ஒசூா் மாவட்ட கால்நடை பண்ணை துணை இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04344 298832 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
பொது ஏலம் தொடா்பான நிபந்தனைகள், விவரங்கள் கால்நடை பராமரிப்புத் துறையின் அனைத்து மண்டல இணை இயக்குநா் அலுவலகங்கள், உதவி இயக்குநா் அலுவலகங்களின் விளம்பர பலகைகளில் ஒட்டப்பட்டிருக்கும். எனவே, பொதுமக்கள் மேற்படி ஏலத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.