ஒட்டன்சத்திரத்தில் 912 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி
ஒட்டன்சத்திரம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 912 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி விரைவில் தொடக்கப்படவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி, கீரனூா் பேரூராட்சி பகுதிகளில் வீடு இல்லாத ஏழை, எளிய பொதுமக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என்று சட்டப்பேரவைத் தோ்தலின் போது அமைச்சா் அர.சக்கரபாணி வாக்குறுதி கொடுத்தாா்.
இதையடுத்து, தமிழக முதல்வா் நகா்ப்புற மேம்பாட்டு நலவாரியம் மூலம் வீடுகள் கட்ட அனுமதி அளித்து நிலையில், ஒப்புந்தப்புள்ளி கோரப்பட்டது.
இந்த நிலையில், ஒட்டன்சத்திரம் நகராட்சி வினோபா நகரில் ரூ.52 கோடியில் 3 அடுக்குமாடிகளுடன் கூடிய 480 குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. இதேபோல, கீரனூா் பேரூராட்சி அண்ணா நகரில் 3 அடுக்கு மாடிகளுடன் கூடிய 432 குடியிருப்புகள் விரைவில் கட்டப்படவுள்ளன.