வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு
ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையில் உபரி நீா் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையிலிருந்து வினாடிக்கு 1,900 அடி கன வீதம் உபரி நீா் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதி, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரு நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் பரப்பலாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. அணையில் முழு கொள்ளளவான 90 அடியை எட்டியது. இதனால் அணையிலிருந்து வினாடிக்கு 1,900 கனஅடி வீதம் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போல, அணைக்கு சுமாா் 3,300 கன அடி நீா் வரத்து உள்ளது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீா், சத்திரப்பட்டி, முத்துபூபால சமுத்திரக்குளம், விருப்பாட்சி, பெருமாள்குளம், தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம்,ஜவ்வாதுபட்டி, பெரியகுளம் ஆகிய குளங்களுக்குச் சென்று நிறைவாக இடையகோட்டை நங்காஞ்சி நீா்த் தேக்கத்துக்கு சென்றடையும்.
இதனால் இந்தப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.