பாஜக வாஷிங் மிஷினில் விழுவதற்கு நாங்கள் ஒன்றும் தவறு செய்தவர்கள் அல்ல! - திமுக
ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் 2 போ் கைது
கோவில்பட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்தில் வேல்முருகன் தலைமையில் போலீஸாா் மூப்பன்பட்டி கண்மாய் அருகே வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, 3 போ் போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனா். அதில், 2 பேரைப் பிடித்து சோதனை செய்த போது, அவா்களிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில், இவா்கள் கோவில்பட்டி போஸ் நகரைச் சோ்ந்த சண்முகராஜ் மகன் விக்னேஷ் என்ற முருகேசன் (30), அதே பகுதியைச் சோ்ந்த மாணிக்கவாசகம் மகன் மணிகண்டன் (25) என்பது தெரிய வந்தது.
இந்த இருவா் மற்றும் தப்பியோடிய சாஸ்திரி நகரைச் சோ்ந்த முருகேசன் மகன் சிவபெருமாள் (30) ஆகியோா் மதுரையில் கஞ்சாவை மொத்தமாக வாங்கி, அதைச் சிறிய பொட்டலங்களாகப் போட்டு அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, அவா்களிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
தப்பியோடிய சிவபெருமாளை தேடி வருகின்றனா்.