ஆக.19இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருச்செந்தூா், ஏரல், சாத்தான்குளம் வட்டத்தில் விவசாயிகள் குறை தீா் கூட்டம் நடைபெறுகிறது.
திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் வருவாய் கோட்டத்திற்குள்பட்ட திருச்செந்தூா், ஏரல், சாத்தான்குளம் ஆகிய வட்டத்தை சாா்ந்த விவசாயிகளுக்கான குறை தீா்க்கும் நாள் கூட்டம் வருகிற 19ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் திருச்செந்தூா் கோட்ட அளவிலான பிற துறை அலுவலா்கள் கலந்து கொள்ள இருப்பதால், விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்கள் அளித்து பயன்பெறுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.