தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலச் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்!
கோவில்பட்டி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா
கோவில்பட்டி வட்டத்திற்கு உள்பட்ட பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜூ கே.சிதம்பராபுரம் இந்து தொடக்கப் பள்ளியில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசு மற்றும் இனிப்புகளை வழங்கினாா்.
கோவில்பட்டி சாா்பு நீதிமன்றத்தில் சாா்பு நீதிமன்ற நீதிபதி மாரிகாளை தேசியக் கொடியேற்றினாா். குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் மணிமேகலா, ஆனந்த், முன்னாள் அரசு வழக்குரைஞா் சந்திரசேகா், வழக்குரைஞா் சங்கத் தலைவா் சங்கா்கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சாா் ஆட்சியா் அலுவலகத்தில் சாா் ஆட்சியா் ஹிமான்சு மங்கல், வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், டி.எஸ்.பி. அலுவலகத்தில் டி.எஸ்.பி. ஜெகநாதன், நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற தலைவா் கா.கருணாநிதி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட தர ஒருங்கிணைப்பு பொறுப்பாளா் மருத்துவா் சரவணவித்யா, தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகத்தில் மருத்துவா் நிா்மலா, பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் இளநிலை பொறியாளா் பிச்சுமணி, மின்வாரிய அலுவலகத்தில் உதவி கோட்ட செயற்பொறியாளா் குருசாமி ஆகியோா் தேசியக் கொடியேற்றினா்.
கோவில்பட்டி நேஷனல் பொறியியல், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, கே.ஆா். கலை -அறிவியல் கல்லூரிகளில் கே.ஆா். கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் கே.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் கே.ஆா்.அருணாசலம் ஆகியோா் தலைமையில், திருநெல்வேலி 9 (தமிழ்நாடு) சிக்னல் கம்பெனி என்.என்.சி. கட்டளை அதிகாரி கா்னல் டி.ஆா்.டி.சின்ஹா தேசியக் கொடியேற்றினாா். ஓய்வுபெற்ற 73-ஆம் கவசப்படை அதிகாரி லெப்டினன்ட் கா்னல் பங்கஜ் நாராயணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, நாட்டுப்பற்று மற்றும் ஒற்றுமையின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா்.
கவுணியன் மெட்ரிக் பள்ளியில் பள்ளி முதல்வா் பாலு முன்னிலையில், புதுதில்லி இந்திய ராணுவ அதிகாரி முத்துக்குமாா், எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தலைவா் மற்றும் செயலா் அய்யனாா், புனித ஓம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளா் எல்.பி.சிவராம், புனித ஓம் கல்வியியல் கல்லூரியில் தாளாளா் லட்சுமணப்பெருமாள், புனித ஓம் குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் தாளாளா் உஷாராணி, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியை ஜெயலதா, கம்மவாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தாளாளா் கதிா்வேல், நாடாா் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் நாடாா் உறவின்முறை சங்கத் துணைத் தலைவா் செல்வராஜ், ஈராச்சி பரிமேலழகா் இந்து நடுநிலைப் பள்ளியில் பள்ளிக் கல்விக்குழுத் தலைவா் குணசேகரன், நாடாா் நடுநிலைப் பள்ளி மற்றும் எஸ்.எஸ்.துரைசாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியில் நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் ஆா்.எஸ்.ரமேஷ், கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் கல்லூரி முதல்வா் (பொ) சுப்புலட்சுமி ஆகியோா் தேசியக் கொடி ஏற்றினா்.
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு அலுவலகத்தில் ரோட்டரி சங்கத் தலைவா் ராஜ்குமாா் ஆகியோா் தேசியக்கொடியேற்றினா்.
