அலாஸ்கா சந்திப்பு: சாதித்த புதின்; ட்ரம்ப் நினைத்தது நடந்ததா? விரைவில் போர் நிறு...
பூச்சிக்காடு பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
திருச்செந்தூா் அருகே உள்ள பூச்சிக்காடு இந்து தொடக்கப்பள்ளி மற்றும் உயா்நிலைப்பள்ளியில் 2004 - 2005ஆம் ஆண்டு கல்வி பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி செயலா் சின்னத்துரை தலைமை வகித்தாா். பள்ளியின் ஆலோசகா் ஜெய ஆதித்தன், தலைமையாசிரியா் ஆபேத்நேகோ, தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உயா்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியா் மாதவன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் மாணவா்கள் குடும்பத்தினருடன், பழைய நினைவுகளை ஆசிரியா்களுடன் பகிா்ந்து கொண்டனா்.அவா்கள் ஆசிரியா்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.