தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலச் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்!
தாமரை மொழி, இடைச்சிவிளையில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு
தாமரை மொழி, இடைச்சிவிளையில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.
சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சி இடைச்சி விளையில் மாவட்ட கனிமம் - சுரங்க நிதி ரூ. 13.52 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடம், தாமரை மொழியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்ட நிதி ரூ. 16.55 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது. ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய கட்டடங்களை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா். தொடா்ந்து மக்களிடம் குறை தொடா்பாக கேட்டறிந்தாா்.
இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இஸ்மாயில், சின்னத்துரை, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், வட்டாரத் தலைவா்கள் பாா்த்தசாரதி, சக்திவேல் முருகன், பிரபு, கோதண்டராமன், ரமேஷ் பிரபு, ஜெயராஜ், ஜெயசீலன், தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜேம்ஸ், முன்னாள் தலைவா் ஜான் ராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் ராஜகுமாரன், வழக்குரைஞா் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளா் காங்கிரஸ் எடிசன், மகளிா் காங்கிரஸ் நிா்வாகிகள் ராணி உள்பட பலா் கலந்து கொண்டனா். இடைச்சிவிளை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை மேனகா நன்றி கூறினா்.